பணவீக்கம் 89 சதவீதமாக உயர்வு: அமெரிக்க – இஸ்ரேல் போரால் அவதியுறும் ஈரானிய மக்கள்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு ஈரானின் தற்போதைய நிலை மற்றும் அதன் பொதுமக்களின் வாழ்க்கை முறைக் குறித்த முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா – இஸ்ரேல் போருக்குப் பிறகு (பெப்ரவரி 28 முதல்) ஈரானின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
ஈரானில் ஆண்டுக்கு ஆண்டுக்கான பணவீக்கம் 89 சதவீதமாகவும் உணவுப் பொருட்களின் விலை 127 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்துள்ளன
ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாறு காணாத வகையில் சரிவைச் சந்தித்துள்ளது.
போரின் ஆரம்பத்தில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கொமேனி புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு அடிபணிய மாட்டோம் என்று ஈரானிய அரசாங்கம் உறுதியாக உள்ளபோதிலும் பொருளாதார ரீதியாக கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
உள்நாட்டு எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தவும் அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தூக்குத் தண்டனைகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

