உகந்தையில் இருந்து பயணித்த பயணம் முதல் நாள் வாகுரவெட்டையில் ஓய்வுக்காக பக்தர்கள் !!!!பொழுதாகும் வண்ணாத்தி கிணத்தடி!!!!
கதிர்காம பாதயாத்திரை 2026 இன் முதலாம் நாள் இரவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பது, இந்த ஆன்மீகப் பயணத்தின் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது.
கதிர்காம பாதயாத்திரையின் இந்த இக்கட்டான சூழலில், அடியார்களின் களைப்பைப் போக்கி, தாகத்தையும் இடநெருக்கடியையும் தாங்கும் மனவலிமையைத் தரும் சில பக்திப் பாடல்கள்
பாதயாத்திரையின் போது அடியார்கள் குழுவாகப் பாடிச் செல்ல “காவடிச் சிந்து” அல்லது “முருகன் பாமாலை” வரிகள் ஆத்மார்த்தமான துணையாக இருக்கும்.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தா உனை மறவேன்!
அற்புதம் ஏதும் உன்னிடமிருந்தால்
அடியேன் தனை மறவாதே!
காடும் மலையும் கடந்து வருவேன்
கந்தா உனைக்காண…
பாடும் அடியார் கூட்டத்தோடு
பரமனே உனைக்காண!”


