தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எடை

தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எடையுடனும், 3 சதவீதமானோர் உடல் பருமன் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியும் குறைவடைந்துள்ள பின்னணியில், பாடசாலை மாணவர்கள் இவ்வாறான நோய் நிலைகளுக்கு ஆளாவது துரதிர்ஷ்டவசமான ஒரு நிலைமை என அந்த அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள தரவுகளின்படி, மக்கள் தொகை வளர்ச்சி வேகம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. 1.9 ஆக இருந்த மக்கள் தொகை வளர்ச்சி வேகம் 1.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin