இலங்கையின் கிழக்கில் ஏறாவூரில் இடம்பெற்றுள்ள சம்பவமொன்று குறித்த காணொளியொன்று தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏறாவூரில் சிறுவர்கள், இளைஞர்கள் சிலர், இன்னுமொரு சிறுவனை மிகவும் மோச**மாக**வும், மூர்க்**கமாகவும் தாக்கும் காணொளியே அது.
குறித்த காணொளியில், ஒரு சிறுவனை ஹெல்மட்டால் சரமாரியாக தாக்**குவ**தும், ஒரு கட்டத்தில் அவனது காற்சட்டையை கழற்**றும் அளவுக்கு சென்றிருப்பதும் தெளிவாக காட்டப்படுகின்றது.
சுவற்றில் சாய்த்து தாக்**கு**வது மட்டுமன்றி, தூ**ச**ன வார்த்தைகளால் அச்சிறுவனை ஏசுவதும், ஓட ஓட அடிப்**பது என மிகக் கொடூ**ரமாக நடந்து கொண்டுள்ளனர் குறித்த ஏறாவூர் சிறுவர்கள்.
இவர்கள் கட்டாயம் ஐ**ஸ் போ**தை**ப் பொருளுக்கு அடிமையானவர்களாக இருக்குமெனவும், அந்த போதையிலேயே இவ்வாறு நடக்கின்றனர் எனவும் சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர்கள், இளைஞர்கள் யார்? அவர்களது சமூகநிலை என்ன? பெற்றோர் யார்? எவ்வகையான மூர்க்கத்தனமாக வளர்க்கப்பட்டிருந்தால், இவ்வாறு கொடூ**ரத்தை அரங்கேற்றியிருப்பர் என பல கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன.

