குவைத்தில் போதைப்பொருட்களுடன் 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!

குவைத்தில் போதைப்பொருட்களுடன் 3 இலங்கையர்கள் உட்பட 7 பேர் கைது!

குவைத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் விசேட சோதனையின் போது கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று இலங்கையர்களுடன், இரண்டு குவைத் நாட்டவர்கள், ஓர் இந்தியர் மற்றும் இரு வெளிநாட்டவர்கள் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

சந்தேக நபர்களிடமிருந்து ஹஷிஷ் (Hashish), ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களை அளவிடும் கருவிகள் மற்றும் பொதி செய்யும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது சந்தேக நபர்களும் சான்றுப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குவைத் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin