இலங்கையில் தீவிரமடையும் டெங்கு ஒழிப்பு விசேட திட்டம்: 2,401 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு 14 மாவட்டங்களில் முன்னெடுத்த 7 நாள் விசேட திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்ட 97,871 வளாகங்களில், 6,268 வளாகங்களில் டெங்கு நுளம்பு இளம்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், 25,626 வளாகங்கள் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்விசாரணையில், பரிசோதிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் 32.9% மற்றும் கட்டுமானத் தளங்களில் 21.8% வீதத்தில் இளம்புழுக்கள் கண்டறியப்பட்டதால், அவ்விரண்டு துறைகளும் அதிக ஆபத்துள்ளவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. நுளம்புகள் பெருகும் நிலையிலிருந்த 21,025 வளாகங்கள் உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டதுடன், 3,348 சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறிய 2,401 வளாக உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

