யாழ்ப்பாண மாணவியின் வரலாற்றுச் சாதனை!

இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து பெருமை சேர்த்த லூட்சி றெஜினஸ் தெற்காசிய நாடுகளுக்கிடையிலான Under-18 பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாண மாணவி ஒருவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியைச் சேர்ந்த மாணவி லூட்சி றெஜினஸ், இலங்கை தேசிய அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண பாடசாலை மாணவி ஒருவர் தெற்காசிய மட்ட பெண்கள் கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்த தெரிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த போட்டித் தொடரில் இந்திய அணியுடன் மோதிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

லூட்சி றெஜினஸின் இந்த சாதனை யாழ்ப்பாணத்திற்கும் வடமாகாணத்திற்கும் மட்டுமல்லாமல் முழு இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இவரின் திறமையை வளர்த்த பயிற்சியாளராக தனுஷ் ராஜசோபனா செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு துறையில் புதிய தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் இந்த சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Recommended For You

About the Author: admin