மரம் சரிந்து விழுந்த விபத்து… மூவர் உயிர் பறிப்பு!
ஜூன் 04 ஆம் திகதி காலை நாவலப்பிட்டி – மாபாகந்த பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில், 15 வயது பள்ளி மாணவன் ஒருவரும், இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றின் மீது திடீரென பெரிய மரம் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
⚠️ கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

