ஈரான் வசம் இன்னும் 40% தாக்குதல் ட்ரோன்கள் கையிருப்பு: அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தகவல்!

ஈரான் வசம் இன்னும் 40% தாக்குதல் ட்ரோன்கள் கையிருப்பு: அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தகவல்!

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் படைகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் வான்வழித் தாக்குதல் திறன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் ஒட்டுமொத்த தாக்குதல் ட்ரோன்களின் (Attack Drones) கையிருப்பில் சுமார் 40 சதவீதத்தை அந்த நாடு இன்னும் தன்வசம் வைத்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் நடத்தப்பட்ட முறியடிப்பு நடவடிக்கைகளால் ஈரானின் ஆயுதக் கிடங்குகள் இலக்கு வைக்கப்பட்டன.

எஞ்சியுள்ள 60 சதவீத ட்ரோன்கள் போரில் பயன்படுத்தப்பட்டோ அல்லது அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எனினும், கையிருப்பில் உள்ள மீதமுள்ள 40 சதவீத ட்ரோன்கள் மற்றும் நிலத்தடித் தளங்களில் உள்ள ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் இன்னும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது தற்காலிக போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், ஈரான் தனது ஆயுத பலத்தை மீளக் கட்டியமைக்க முயற்சி செய்யலாம் என்ற அச்சமும் பாதுகாப்பு ஆய்வாளர்களிடையே எழுந்துள்ளது.

Recommended For You

About the Author: admin