ஈரானுக்கு கடும் எச்சரிக்கை: இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை!

ஈரானுக்கு கடும் எச்சரிக்கை: இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை! உடன்பாடு இன்றேல் உட்கட்டமைப்புகள் நிர்மூலமாகும்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்கக் குழுவிற்கு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

 

ட்ரம்ப்பின் எச்சரிக்கை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை அமெரிக்கா முற்றிலுமாக அழிக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். “இனி மென்மையான அணுகுமுறை கிடையாது” (No More Mr. Nice Guy) என அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மீறப்பட்ட போர்நிறுத்தம்: ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாட்டு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் ஈரான் நாளொன்றுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்கினால் மட்டுமே நீரிணையைத் திறக்க முடியும் என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது.

 

இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தூதரகப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை பிராந்தியத்தின் அமைதியைத் தீர்மானிக்கும் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin