அமெரிக்கா விதித்த கடற்படை தடையை மீறி, ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்

அமெரிக்கா விதித்த கடற்படை தடையை மீறி, ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல் (supertanker) Hormuz நீரிணை வழியாக பயணம் செய்து, ஈரானின் Imam Khomeini துறைமுகம் நோக்கி சென்றதாக, ஈரானின் Fars News Agency தெரிவித்துள்ளது.

இந்த மிகப்பெரிய கச்சாய் எண்ணெய் கப்பல் சுமார் 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

கப்பல் தனது tracking system அமைப்பு நிறுத்தாமல் வெளிப்படையாகவே பயணம் செய்ததுடன்
இது அமெரிக்க தடைக்கு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது

எனினும் அந்தக் கப்பல் சரக்குடன் வந்ததா அல்லது காலியாக உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஈரான் உள்துறை அமைச்சர் கூறுகையில்,

ஈரானுக்கு 8,000 km-க்கும் அதிகமான நில மற்றும் கடல் எல்லைகள் உள்ளன அதனால் எந்த தடையும் நீண்ட காலத்தில் பயனில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin