தேசிய நீதியில் முதலிடம் பிடித்த யாழ் மகளிர் கபடி அணிக்கு கௌரவம்.
தேசிய நீதியில் கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மகளிர் அணியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது
36 ஆவது தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடத்தப்பட்ட தேசிய மட்ட போட்டியில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மகளிர் கபடி அணி தேசிய நீதியில் முதலிடத்தை கைப்பற்றியது.
முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி 26 மாவட்டங்கள் பங்கு பற்றிய குறித்த போட்டியில் யாழ் மகளிர் கபடி அணி முதல் இடத்தை பெற்றது.
இதில் சிறப்பான விடயம் என்னவெனில் இறுதிப் போட்டியில் வடக்கு மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் மோதியமை விசேட அம்சமாகும்.
குறித்த போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் யாழ் மாவட்ட செயலக முன்வாயில் இருந்து மாலை அணிவித்து வரவேற்றதுடன் வெற்றி ஈட்டிய வீராங்கனைகளுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ,தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் வினோதினி, உத்தியோதர்களான யுவராஜ் அகிலன் உட்பட பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் பயிற்சியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்..


