தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய மட்ட கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த யாழ் மாவட்ட மகளிர் அணிக்கு அரசாங்க அதிபர் கௌரவம்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய மட்ட கபடிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மகளிர் அணியினரை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் திறமையைப் பாராட்டிய அரசாங்க அதிபர், எதிர்காலத்திலும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

