முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜசேகர தனது 83 வது வயதில் காலமானார்.!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜசேகர தனது 83 வது வயதில் காலமானார்.!!

1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதுடன் தனது அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது இவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்தார். அந்த தாக்குதலில் உயிர் தப்பியிருந்தாலும், பின்னர் நீண்டகாலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

 

தென் மாகாணத்தைச் சேர்ந்த அனுபவமிக்க அரசியல்வாதியாக பரவலாக அறியப்பட்ட விஜேசேகர, இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றியவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .

Recommended For You

About the Author: admin