ஈரானில் சுட்டுவீழ்த்தப்பட்ட F-15 E விமானத்தின் விமானிகளை தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானமான A 10 விமானம் மீதும் ஈரான் நேற்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளது இதனை அமெரிக்கா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் விமானி குவைத் வான்வெளியில் பரசூட் மூலம் வெளியேறி அவர் பாதுகாப்பாக உள்ளார். விமானம் விழுந்து நொருங்கியுள்ளது.
இது ஒற்றை விமானி இயக்கும் A-10 Thunderbolt ரக விமானமாகும்.
இதேவேளை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் ஹெலிகொப்டர்களும் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகின, ஆனால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

