அவதூறு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் அழைப்பு!
தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியரை அவதூறு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று (2026 ஏப்ரல் 02) யாழ்ப்பாண நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையில் ஒரு வைத்தியர் மட்டும் முன்னிலையாகியிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் சமூகமளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரையும் நேரில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

