இரவில் மணல் ஓடுவதற்கு தடை பிரச்சினைகளுக்கு தீர்வு தருமா? விஞ்ஞானபூர்வமான ஆய்வு தீர்மானம் தேவை!
சட்டவிரோத மணல் வியாபாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பு அதில் மாற்றுக் கருத்து இடமில்லை.
சட்டவிரோத மணல் ஏன் தோற்றுவிக்கப்படுகிறது அதற்கான காரணிகளை கண்டுபிடித்து அதற்கான தீர்வுகளை முன் வைக்காமல் ஒரு இரவில் குளிரூட்டப்பட்ட அறையில் எடுக்கப்படும் தீர்மானம் நன்மை பயக்காது என்பது என்னுடைய கருத்து.
சட்டவிரோத மணல் வியாபாரம் பொலிசாரின் ஒத்துழைப்பின்றி இடம்பெறாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும் அதை அமைச்சரும் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் விஞ்ஞானபூர்வமான ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
யாழ் மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு #மாதத்திற்கு அனுமதிப்பததிரம் மூலம் எவ்வளவு மணல் கொண்டு செல்லப்படுகிறது என்பது தெரிவிக்கப்படதாக தெரியவில்லை.
மாவட்டத்திற்கு ஒரு மாதத்துக்கு தேவையான சராசரி மணலின் தேவைப்பாடு எவ்வளவு அதைப் பெறுவதற்கான வழி என்ன அல்லது மாற்று ஏற்பாடு இதை யாரும் முன் வைத்ததாக தெரியவில்லை.
சட்டவிரோத மணல் கொடிகட்டி பறக்கிறது என்றால் மணலின் தேவைப்பாடு அதிகம் என்பது அர்த்தம் அதை உரியவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அடுத்ததாக இரவில் மணல் ஏற்றுவதற்கு தடைவிதிப்பதால் மட்டும் மணல் மாஃபியாக்களை ஒழித்து விட முடியாததோடு விபத்துகளையும் தடுத்து விட முடியாது.
கொக்குவில் பகுதியில் பாடசாலை மாணவியை பாடசாலை விட்டு செல்லும்போது டிப்பர் வாகனம் மோதி தள்ளி சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
இரவில் மணல் ஏற்றுவதற்கு தடை விதித்தால் பகலில் அதிகமாக டிப்பர் வாகனங்கள் வீதிகளில் திரியும் இதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதில் கூறுவார்களா?
சாதாரணமாக ஏ 9 வீதியில் டிப்பர் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது குறிப்பாக #கிளிநொச்சியில் ஒரு மாதத்தில் மட்டும் மூன்று விபத்துக்கள் இடம் பெற்று மூவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகி இருக்கிறது ? இதற்கு யார் பதில் கூறுவது? யாராவது கூட்டம் நடத்தினீர்களா?
ஒரு டிப்பர் வாகனம் ஒரு நாளைக்கு ஒரு அனுமதி பாத்திரத்தை வைத்து இரண்டு அல்லது மூன்று தடவைகள் மணல் ஏற்றுவதாக தகவல் உண்டு. அதற்கு யார் காரணம்?
ஒரு நாள் அனுமதிப்பாத்திரத்தை வைத்துக் கொண்டே திருட்டு மணல் ஓடுவது சாதாரணமாக விடயமாக மாறிவிட்டது அதை ஒழிக்க வேண்டுமானால் QR நடைமுறையை மணலுக்கும் கொண்டு வாருங்கள் அனுமதி பத்திரம் என்ற போர்வையில் இடம்பெறும் திருட்டு மணல் வியாபாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
இதையெல்லாம் கட்டுப்படுத்துவதை தாண்டிலும் மாவட்டத்திற்கு தேவையான மணல் தேவையை #எவ்வாறு பூர்த்தி செய்வோம் என்ற விஞ்ஞான ரீதியான ஆய்வை உரியவர்கள் முன்வைக்க வேண்டும்.
அதை விடுத்து சட்ட விரோத மணல் டிப்பர்களை #கறுத்தப் பட்டியலில் போடுவோம் என வடக்கில் அதிகாரம் மிக்க ஒருவர் ஆறு மாதத்திற்கு முன்னர் ஒரு ஊடக அறிக்கையை விடுத்தார்.
அது அவ்வளவுதான் அன்றய நாள் பத்திரிகை செய்தியுடன் முடிவடைந்த கதையாய் போச்சு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
அதை விடுத்து மணல் மாஃபியாக்களை கட்டுப்படுத்த போகிறோம் என மணல் விலையை இரண்டு இலட்சத்திற்கு கொண்டு வந்து விடாதீர்கள்!

