ஜனாதிபதி அநுர- பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு

மத்திய கிழக்கு போர் எதிரொலி : ஜனாதிபதி அநுர- பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று (24.03.2026) விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மத்திய கிழக்கில் மாறிவரும் போர்ச் சூழல்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புகள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளதாக இந்தியப் பிரதமர் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இரு தலைவர்களும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin