FIFA-வின் புதிய விதியால் ஆட்டமிழந்த முதல் வீரர்! கால்பந்து உலகில் ஒரு விசித்திரமான சிவப்பு அட்டை!

மைதானத்தில் எதிரணி வீரரிடம் பேசும்போது கைகளால் வாயை மூடிக்கொண்டு பேசினாரா? இனி அதற்கு ரெட் கார்டு தான்! பீபாவின் புதிய விதியால் முதல் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது.

பராகுவே – துருக்கி அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மிகுவெல் அல்மிரோன் எதிரணி வீரரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கைகளால் வாயை மூடிக்கொண்டு பேசியுள்ளார்.

நடுவர் உடனே தலையிட்டு, வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரி தொழில்நுட்பம் மூலம் காட்சிகளை மீண்டும் ஆய்வு செய்தார்.

பீஃபாவின் புதிய விதியை அல்மிரோன் மீறியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு உடனடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்!

இனிமேல் மைதானத்தில் ரகசியம் பேச நினைக்கும் வீரர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி!

Recommended For You

About the Author: admin