மும்பை கடலோரம் இருட்டில் தரைதட்டிய மர்ம ஷென்லாங் கப்பல்! 

மும்பை கடலோரம் இருட்டில் தரைதட்டிய மர்ம ஷென்லாங் கப்பல்!

சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய கடற்படை விரித்திருந்த பாதுகாப்பு வளையத்தை, ஒரு இந்திய மாலுமி தன்னுடைய சாதுர்யத்தால் சுக்குநூறாக்கிய சம்பவம்தான் உலகையே அதிர வைத்துள்ளது..

சோஷியல் மீடியா முழுக்க இந்த செய்திதான் பேச்சாக உள்ளது.. நள்ளிரவு இருட்டில் உயிரை பணயம் வைத்து, அதிநவீன தொழில்நுட்பக் கண்களில் மண்ணை தூவிவிட்டு மும்பை கரை ஒதுங்கிய அந்த மர்மக் கப்பலின் பின்னணியில் உள்ள சில தகவல்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

 

ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஹார்மோஸ் ஜலசந்தி, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% பங்களிப்பை கொண்ட மிக முக்கியமான கடல் வழியாகும்.

 

ஈரான் கடல்

 

வெறும் 33 மைல் அகலம் கொண்ட இந்த குறுகிய நீர்வழிப் பாதையானது, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்து தினமும் மில்லியன் கணக்கிலான எண்ணெய் பேரல்கள் இந்த வழியாகவே உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன..

 

வடக்கே ஈரானையும், தெற்கே ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தையும் எல்லையாகக் கொண்ட இந்த அளவுக்கு முக்கியமான பகுதி தான், சர்வதேச அரசியலில் எப்போதும் ஒரு பதற்றமான மோதல் புள்ளியாகவே இருந்து வருகிறது.

 

மும்பையில் தரைதட்டிய கப்பல்

 

ஆனால், கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் அதிபர் கோமத் கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்ச் 2ம் தேதி முதல் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்தது.. இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததுடன், எரிவாயு, உரம், உணவு பொருட்களுக்கு உலகளாவிய தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.. அவ்வளவு ஏன்? மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு வந்துவிட்டது,.

 

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்தும் கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்து வந்தது. இதனால் எல்பிஜி உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாளுக்கு நாள் எகிறியது.

 

ஷென்லாங் கப்பலில் விளக்கை அணைத்து

 

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில்தான், ஷென்லாங் என்ற கப்பல் ஈரானின் தடைகளை தகர்த்து மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

லைப்ரியா நாட்டைச் சேர்ந்த இந்த கப்பலை ஒரு இந்திய மாலுமி சாதுர்யமாக இயக்கி வந்துள்ளார். ஈரானிய கடற்படையின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க, கப்பலில் இருந்த AIS அதாவது Automatic Identification System என்ற ஆட்டோமெடிக் அடையாள அமைப்பை செயலிழக்க செய்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, மிட்நைட்டில் அந்த கப்பலின் அனைத்து லைட்டுகளையும் அணைத்துவிட்டு முழு இருட்டில் இந்த அபாயகரமான கால்வாயை கடந்திருக்கிறார்கள்.

 

இந்தக் கப்பலில் மொத்தமே 29 மாலுமிகள்தான் இருந்தார்களாம். சுமார் 135,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுமந்து வந்த இந்த பிரம்மாண்ட கப்பலில் இருந்து, எண்ணெய் பேரல்களை மும்பையில் இறக்கி முடிக்க மட்டும் சுமார் 38 மணி நேரம் ஆகியிருக்கிறது. இந்திய மாலுமியின் இந்த அதிரடி செயல் ஈரானின் பாதுகாப்புக் வளையத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

 

இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.. “இனிமேலும் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடினால், உலக வரைபடத்தில் ஈரான் என்ற நாடு இருந்த இடமே தெரியாமல் ஆக்கிவிடுவோம்” என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளதால், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

ஆனால், இந்த நள்ளிரவு சம்பவத்தை நாம் உற்றுநோக்கினார், சர்வதேச கடல்சார் பாதுகாப்பில் இந்திய மாலுமிகளின் துணிச்சலையும், தொழில்நுட்ப அறிவையும் உலகிற்குப் பறைசாற்றியிருப்பதாகவே தெரிகிறது.

 

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஒரு பகுதியில், ரேடார் மற்றும் கண்காணிப்புக் கருவிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, ஒரு பிரம்மாண்ட கப்பலை வழிநடத்தி வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்த நெருக்கடி சூழலில் இந்தியா தன்னிச்சையாக செயல்படும் திறனை உலகுக்கு அசால்ட்டாக உணர்த்தியிருக்கிறது,

 

இருந்தாலும், அமெரிக்க அதிபரின் கடும் வார்னிங்தான், இந்த பகுதியில் ஒரு முழு அளவிலான போருக்கான சூழலை உருவாக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. என்னாக போகிறதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்

Recommended For You

About the Author: admin