Air Canada விமானம் New Yorks LaGuardia விமான நிலையத்தில் விபத்து!

Air Canada விமானம் ஒன்று New Yorks LaGuardia விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளானது!

அந்தப் பயணிகள் விமானம் Air Canada நிறுவனத்தைச் சேர்ந்தது. அது கனடாவின் Montreal மாகாணத்தில் இருந்து பறந்து வந்து, பல மில்லியன் மக்கள் வசிக்கும் அமெரிக்காவின் New Yorks நகரத்தில் தரையிறங்கியது.

New Yorks LaGuardia விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் ஒன்றில், பயணிகள் விமானம் ஒன்று தீயணைப்பு வண்டியுடன் மோதியதில், விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்தனர்.

 

நாற்பத்தொரு பயணிகள் மற்றும் பணியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையிலிருந்து மீண்டும் வெளியேறிவிட்டனர், அதேசமயம் ஒன்பது பேருக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படுகிறது என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

 

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணிக்குச் சற்றுப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்தது.பயணிகள் பட்டியலின்படி, விமானத்தில் 76 பேர் இருந்தனர். இவர்களில் நான்கு பேர் விமானப் பணியாளர்கள்.

Recommended For You

About the Author: admin