பிரான்ஸில் பேரங்காடிகள் மீது அதிர்ச்சி தரும் இணையத் தாக்குதல்!
பல மில்லியன் யூரோ மதிப்பிலான உணவுப் பொருள்கள் நாசம்
பிரான்சில் உள்ள நூற்றுக்கணக்கான பேரங்காடிகளில் நடத்தப்பட்ட திடீர் இணையத் தாக்குதல் காரணமாக, அங்குள்ள குளிர்பதனப் பெட்டிகள் மற்றும் உறையவைக்கும் கருவிகள் முழுமையாகச் செயல்படாமல் முடங்கின.
Carrefour, Intermarché, Monoprix போன்ற முன்னணிப் பேரங்காடிகள் உட்பட சுமார் 400 கடைகள் இந்தத் தாக்குதலாப் பாதிக்கப்பட்டுள்ளன.
குளிர்பதன அமைப்புகளைத் தொலைவிலிருந்து இயக்கப் பயன்படும் மென்பொருளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், கருவிகளின் வெப்பநிலை 6 மணி நேரத்திற்கு 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பல மில்லியன் யூரோ மதிப்பிலான உணவுப் பொருள்கள் முழுமையாகக் கெட்டுப்போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பிரெஞ்சு அதிகாரிகள் உடனடியாக தீவிர இணையக் குற்ற விசாரணையைத் தொடங்கியுள்ளனர்டன், பாதிக்கப்பட்ட கடைகளும் குளிர்பதன அமைப்புகளை வழக்கநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்புக்கு அனைத்து நிலைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவு மற்றும் வேளாண்மை ஆணையர், இந்தத் தாக்குதலுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

