செங்கடலில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலில் தீ விபத்து.

செங்கடலில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலில் தீ விபத்து.

2026 மார்ச் 12 அன்று செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Gerald R. Ford (CVN‑78) இல் தீ விபத்து ஏற்பட்டதை அமெரிக்கக் கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

கப்பலின் பிரதான சலவைப் பகுதியில் (Main Laundry Space) இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 2 அமெரிக்க கடற்படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தீ விபத்து போர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டது அல்ல என அமெரிக்க அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். தீ விரைவாக கட்டுப்படுத்தப்பட்டது.

கப்பலின் உந்துவிசை இயந்திரம் பாதிக்கப்படவில்லை. இதனால் கப்பல் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது இந்தக் கப்பல் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செங்கடலில் பணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin