வடக்கு கல்வியை அழிப்பது யார்? அரசியல் வாதிகளா? நிர்வாக அதிகாரிகளா?
கொக்குவில் இந்து கல்லூரி நிர்வாகம் கையூட்டலை எதிர்பார்க்கிறதா????
கொக்குவில் இந்த கல்லூரி தரம் 6 அனுமதி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என தகவல் அறியும் சட்டமூலத்தில் வெளிவந்துள்ளது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் ஒரு வகுப்பில் ஆக குறைந்தது 45 மாணவர்கள் இருக்க வேண்டும் ஆனால் தற்போது கொக்குவில் இருந்து கல்லூரி தரம் 6 வகுப்பறைகள் முழுமையாக 45 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவில்லை.
பாடசாலை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் ஏன் இந்த எண்ணிக்கை முழுமைப்படுத்தப்படவில்லை என்பது இன்று வரை கேள்வியாக உள்ளது.
ஒருவேளை கையூட்டல்களை எதிர்பார்த்து இடை நடுவில்ல் மாணவர்களை உள்ளீக்கும் நடவடிக்கைக்காக விடப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் வலுவாக விழுகிறது
யாழ்ப்பாணம் வலய கல்வி அலுவலகத்தின் தகவல் அறியும் படிவத்திற்கான பதிலின் மூலம் வினா 3.3 இல் வினாவப்பட்டதற்கு அமைய மாணவர் தெரிவுபட்டியல் வலய கல்விப் பணிமனையின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மாணவர் தெரிவினை மேற்கொண்டு தெரிவு பட்டியலை வலய கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஏற்கனவே வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியின்றி உள்வாங்கப்பட்டு கற்றல் செயல்பாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் சுற்று நிருபத்தின்படி தெரிவுகள் மேற்க்கொள்ளப்படின் ஏற்கனவே தவறாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் நீக்கப்படும் எனும் பொருள் வெளிப்படுகிறது.
அதாவது அவர்கள் பாடசாலையில் இருந்து நீக்கப்படுவார்கள்! தகுதி இருந்தும் வெளியே நிற்க்கும் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள்.
இதில் தவறு யாருடையது? பாதிக்கப்படப்போகும் மற்றும் தகுதி இருந்தும் அனுமதி கிடைக்காமல் காத்திருக்கும் இச்சிறார்களின் நிலை என்ன?


