பாஜக வந்துடுங்க.. பவன் கல்யாண் போட்ட ‘வாட்ஸ்அப்’ கால்.. விஜய்யை மிரட்டும் ‘சிரஞ்சீவி’ சென்டிமெண்ட்
தனி மரம் தோப்பாகாது… தப்பு பண்ணிடாதீங்க!” – இது ஆந்திராவின் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண், தமிழகத்தின் த.வெ.க தலைவர் விஜய்க்கு கொடுத்திருக்கும் மிக முக்கியமான அட்வைஸ் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
டெல்லி தரப்பு ஒரு பக்கம் 65 சீட் கொடுத்துக் கழுத்தை நெரிக்க, இன்னொரு பக்கம் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக ‘பாச வலை’ வீசப்பட்டிருப்பதுதான் தற்போதைய ஹாட் அப்டேட்.
“நானும் தோற்றவன்தான்!” – மனம் திறந்த பவன்
சமீபத்தில் நடந்த அந்த ரகசியப் பேச்சின் போது, பவன் கல்யாண் தன் கடந்த காலத் தோல்விகளை அடுக்கியதாகத் தெரிகிறது. “நானும் ஆரம்பத்தில் தனித்தே நின்றேன்… தோற்றேன். ஆனால், எப்போது தேசிய கூட்டணியுடன் (NDA) கைகோர்த்தேனோ, அப்போதுதான் வெற்றி சாத்தியமானது. ஆந்திராவில் இப்போது நான் துணை முதல்வர். இந்த அதிகாரம் கூட்டணி கொடுத்ததுதான்” எனத் தன் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்.
விஜய்யிடம் அவர் வைத்த மிக முக்கியமான பாயிண்ட் இதுதான்: “ஆந்திராவில் என் அண்ணன் சிரஞ்சீவி மெகா ஸ்டாராக இருந்தும், கூட்டணி இல்லாமல் அரசியல் செய்ததால் தான் சறுக்கினார். அவர் அதனால் அரசியலை விட்டே போக வேண்டிய சூழல் வந்தது.. அந்தத் தவற்றை நீங்கள் தமிழ்நாட்டில் செய்துவிடாதீர்கள்!”
டெல்லி கொடுத்த ‘சிக்னல்’!
2026 சட்டமன்றத் தேர்தலுக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) பலப்படுத்தத் துடிக்கும் டெல்லி மேலிடம், விஜய்யை எப்படியாவது தங்கள் வலைக்குள் இழுக்கக் காய் நகர்த்தி வருகிறது. “உங்களுக்கு 65 தொகுதிகள் ஒதுக்குகிறோம். நீங்கள் எங்கள் பக்கம் வாருங்கள்” என்பதுதான் டெல்லி வைத்திருக்கும் அந்த டீல்.
ஆனால், இந்த டீலை விஜய் ஏற்கத் தயங்குவதாகத் தகவல். இதனால் கடுப்பான டெல்லி தரப்பு, “ஒன்று கூட்டணிக்கு வாருங்கள், இல்லையென்றால் அரசியலை விட்டே ஒதுங்குங்கள்” என மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் த.வெ.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள் ரகசியமாகப் பேசிக்கொள்கிறார்கள். விஜய் எதிர்க்கட்சி வாக்குகளை பிரிப்பதை பாஜக விரும்பவில்லை. இதை தடுக்கவே கூட்டணி இல்லையென்றால் நோ அரசியல் என்று டெல்லி பிரஷர் போடா முடிவு செய்துள்ளதாம்.
இந்த கூட்டணி போராட்டத்திற்குப் பின்னால் டெல்லியின் மாஸ்டர் பிளான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. “நாங்கள் பேசிப் பார்த்தோம்… கேட்கவில்லை. இனி ‘முறையாக’க் கையாளுங்கள்” என மேலிடம் உத்தரவிட்டதன் விளைவுதான் மார்ச் 10 சி.பி.ஐ சம்மன் என்கிறார்கள்.
கூட்டணிக்கு வந்தால்: 65 தொகுதிகள் + மத்திய அரசின் ஆதரவு.
மறுத்தால்: கரூர் விபத்து வழக்கு முதல் பழைய கோப்புகள் வரை தூசி தட்டப்படும்.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கத்தியின் முனையில்தான் இப்போது த.வெ.க நிற்கிறது.
குழப்பத்தில் நிர்வாகிகள்!
“தலைவர் (விஜய்) கொள்கையில் உறுதியாக இருக்கிறார். ஆனால், பவன் கல்யாண் போன்ற ஒரு நண்பரே இப்படிச் சொல்லும்போது, அவர் யோசிக்கத் தொடங்கியுள்ளார்” என்கிறது பனையூர் வட்டாரம். சிரஞ்சீவியின் அரசியல் வீழ்ச்சியை ஒரு உதாரணமாகச் சொன்னது, விஜய்யை ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளதாம்.
டெல்லியின் ‘சம்மன்’ நெருக்கடி ஒருபுறம், பவனின் ‘அண்ணன்’ சென்டிமென்ட் மறுபுறம் என இரட்டைத் தாக்குதலில் சிக்கியுள்ள விஜய், மார்ச் 10-க்குப் பிறகு எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

