மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி! 

மீண்டும் ஒரு “வரிசை மரணம்” – இலங்கையில் அதிர்ச்சி!

​”பழைய நினைவுகள்… மாறாத வலிகள்!” – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் எரிபொருள் வரிசைகளில் மக்கள் மரணித்த அந்தப் பயங்கரமான காட்சிகள், மீண்டும் ஒருமுறை இலங்கை மக்களின் கண்முன்னே வந்துள்ளது.

 

🔍​நடந்தது என்ன?

குருணாகல் பகுதியில் நேற்று முன்தினம் மதியம், கொளுத்தும் வெயிலில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

​மக்களின் குமுறல்..

பொருளாதார நெருக்கடியின் உச்சகட்டத்தில் எரிபொருள் வரிசைகளில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம் இன்னும் ஆறாத நிலையில், தற்போதைய ஆட்சியிலும் அதே போன்றதொரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

​”அன்று நடந்தது விதியா? இன்று நடப்பது சதியா?” என சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

​எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், கள நிலவரம் வேறாக இருப்பது இந்த மரணத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீண்டும் ஒரு பொருளாதாரப் புயல் இலங்கையை நெருங்குகிறதா? #likedtamil

Recommended For You

About the Author: admin