ஈரான் விவகாரம் – வன்முறையைத் தவிர்க்க பாப்பரசர் வேண்டுகோள்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளை ஆழ்ந்த கவலையுடன் கண்காணித்து வருவதாகவும், “வன்முறைச் சூழல்” என்று அவர் அழைத்ததை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் போப் லியோ கூறியுள்ளார்.
வன்முறைச் சூழல் சரிசெய்ய முடியாத படுகுழியாக மாறுவதற்கு முன்பு அதைத் தடுக்கும் தார்மீகப் பொறுப்பை ஏற்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நான் மனமார்ந்த வேண்டுகோள் விடுக்கிறேன். என்று போப் கூறியுள்ளார்.
ஸ்திரத்தன்மையும் அமைதியும் பரஸ்பர அச்சுறுத்தல்கள் மூலமாகவோ அல்லது ஆயுதங்கள் மூலமாகவோ கட்டமைக்கப்படுவதில்லை. ஆனால் நியாயமான, உண்மையான மற்றும் பொறுப்பான பேச்சு வார்த்ததை மூலம் மட்டுமே கட்டமைக்கப்படுகின்றன. என போப் இன்று (01) பிரார்த்தனைக்குப் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் உள்ள பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களிடம் தனது வாராந்திர உரையின் போது குறிப்பிட்டுள்ளார்.

