இஸ்ரேல் – ஈரான் போர்: செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஹௌதிகள் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலால் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், செங்கடல் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து மீது மீண்டும் ஈரான் ஆதரவு யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தொடங்கவுள்ளனர்.

முன்னதாக, இஸ்ரேல் – காஸா போரின்போது செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து, காஸாவுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதால், செங்கடலில் தாக்குதலை நிறுத்தியது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் செங்கடல் வழித்தடத்தில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin