பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவைக் கைவிடக் கோரியும் மொத்தம் 29,069 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளன.
இப்போராட்டம் கடந்த பிப்ரவரி 14-ஆம் திகதி தொடங்கி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் சிவில் சமூக அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது.
திரட்டப்பட்ட அனைத்து அசல் கையொப்பங்களும் தற்போது உத்தியோகபூர்வமாக நீதி அமைச்சுக்குத் தபாலிடப்பட்டுள்ளன.
திரட்டப்பட்ட கையொப்பங்களின் பிரதிகள் உள்நாட்டு அரசாங்கத்திற்கு மட்டுமன்றி, சர்வதேச ரீதியாக
ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF)ஆகியவற்றிடமும் இந்தியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களிடம் நேரடியாகக் கையளிக்கப்பட உள்ளன.
மிகக் குறுகிய காலப்பகுதியில், குறிப்பிட்ட சில சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து அரசின் “மோசமான” சட்ட முன்மொழிவுக்கு எதிராக இவ்வளவு பெரிய அளவிலான மக்களின் ஆதரவைத் திரட்டியிருப்பது ஒரு முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது


