ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி!

ஈஸ்டர் தாக்குதல் சுரேஷ் சலே 90 நாள் தடுப்பில் விசாரிக்க அனுமதி! சஹாரான் மதிப்பளித்த ‘அபு ஹிந்த்’ எனும் மர்ம நபர் சுரேஷ் சலேயா?

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஒரு பாரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னைய ரணில் – கோட்டாபய அரசாங்கங்களால் மூடிமறைக்கப்பட முயன்ற பல உண்மைகள், தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

 

அபு ஹிந்த் (Abu Hind) பின்னணி: சஹாரான் ஹாசிமுடன் தொலைபேசியில் அடிக்கடி தொடர்பிலிருந்த, சஹாரான் மதிப்பளித்த ‘அபு ஹிந்த்’ எனும் மர்ம நபர் சுரேஷ் சலே தான் என்று நீண்டகாலமாகவே சந்தேகிக்கப்பட்டு வந்தது. சஹாரானின் மனைவி பாத்திமா ஹாதியா வழங்கிய வாக்குமூலங்கள் இதனை வலுப்படுத்துகின்றன.

 

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதன் படி, கோட்டாபய ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான கடும்போக்குவாதக் குழுக்கள் வளர்க்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சின் இரகசியக் கணக்குகளைப் பயன்படுத்தி, சஹாரான் தலைமையிலான குழுவுக்கும், மறுபுறம் பொதுபல சேனா போன்ற அமைப்புக்களுக்கும் நிதி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ் சலேயை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர் ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் வெறும் சாட்சியாக மாத்திரமல்லாமல், ஒரு பிரதான குற்றவாளியாகவே (Accused) கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என மக்கள் தரப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது.

 

இனவாதத் தீயை மூட்டி, அதன் ஊடாக அரசியல் லாபம் தேடிய சக்திகளின் முகத்திரை தற்போது கிழிக்கப்படத் தொடங்கியுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரு ஆரம்பமாகப் பார்க்கப்படுகின்றது.

 

Recommended For You

About the Author: admin