குமண காட்டுக்குள் ‘மிட்நைட்’ வேட்டை கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது!

குமண காட்டுக்குள் ‘மிட்நைட்’ வேட்டை கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது!

அமைதிக்கு பெயர் போன குமண தேசிய பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கி முழக்கங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரு பெரிய கும்பலை விசேட அதிரடிப்படையினர் (STF) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!

​🌊 சினிமா பாணியில் கடல் வழி கடத்தல்!

​தரை வழியாகச் சென்றால் பொலிஸாரிடம் சிக்கிக் கொள்வோம் என நினைத்த இந்த “நவீன வேட்டைக்காரர்கள்”, ஒரு படி மேலே போய் கடல் வழியை தேர்வு செய்துள்ளனர். 25 குதிரைத்திறன் கொண்ட அதிவேக படகில் (Fiber Boat) இறைச்சிகளை ஏற்றி, தப்பிக்க முயன்றபோதுதான் அறுகம்பே STF அதிகாரிகள் விரித்த வலையில் சிக்கினர்.

​🦌 சிக்கியவை என்ன? (வேட்டையின் பகீர் பட்டியல்)

​சோதனையில் சிக்கிய பொருட்களின் விபரங்கள் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

🦬​காட்டு எருமை இறைச்சி:- 56 கிலோ கிராம் 🥩

🦌​மானிறைச்சி:- 17 கிலோ கிராம் 🦌

​ஈரல் பகுதிகள்:- 16 கிலோ கிராம்

🐢​அரிய வகை கடலாமை முட்டைகள்:- 57 (கடற்கரையில் வைத்து சிக்கியவை) 🥚

 

​⛓️ 6 பேர் கைது!!

 

​ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த “மின்னல் வேக” சோதனையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்த படகு, எஞ்சின் மற்றும் எரிபொருள் கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

​கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்குப் பின்னால் பெரிய ‘நெற்வொர்க்’ ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது!

Recommended For You

About the Author: admin