இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம்: 15 சொகுசு விமானங்களில் பறந்து சென்ற வி.ஐ.பி-க்கள்! 

கொழும்பில் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம்: 15 சொகுசு விமானங்களில் பறந்து சென்ற வி.ஐ.பி-க்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (பெப்ரவரி 15) நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இலங்கைக்கு சென்றனர்.

🛩️ இந்தப் போட்டியை நேரில் ரசிப்பதற்காக சுமார் 15 தனியார் சொகுசு ஜெட் விமானங்களில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வி.ஐ.பி-க்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

அங்கு சென்றவர்களில் பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜே ஷா உள்ளிட்ட பல கோடீஸ்வர வர்த்தகர்களும் அடங்குவர்.

🏆 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

போட்டியைத் தொடர்ந்து அங்கு சென்றிருந்த வி.ஐ.பி-க்கள் அனைவரும் மீண்டும் தமது நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்த ஆட்டம் மைதானத்தில் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது!

Recommended For You

About the Author: admin