நமது நிலம் நமதே! ஆக்கிரமிப்பிற்கு எதிராக அணிதிரள்வோம்! சுரேஷ் அழைப்பு
வடக்கு கிழக்கில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள முக்கிய அழைப்பு:
📍 தமிழ் இனப் பரம்பலையே சிதைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கிவுள் ஓயா திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணிகள் ஏற்கனவே பறிபோயுள்ள நிலையில், தற்போது வடக்கிலும் இந்த அபகரிப்புகள் தீவிரமடைந்துள்ளன. படிப்படியாக எமது அடையாளத்தைச் சிதைக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என சுரேஸ் வலியுறுத்தி உள்ளார்.
🗓️ அந்த வகையில், எதிர்வரும் சுதந்திர தினத்தன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தமிழ் மக்களும் தார்மீக ஆதரவை வழங்குவதோடு, பெருந்திரளாகப் பங்கேற்று மக்களின் பலமான எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு சுரேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
நமது நிலம், நமது உரிமை, நமது அடையாளம்!

