மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூரான்!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாள் சிறப்பு வழிபாடுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.
மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று , வள்ளி தெய்வானை சமேதரராய் வேல் பெருமான் திருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.


