பலுசிஸ்தானில் உச்சகட்ட வன்முறை: 40 மணிநேர மோதலில் 145 போராளிகள் உயிரிழப்பு!

பலுசிஸ்தானில் உச்சகட்ட வன்முறை: 40 மணிநேர மோதலில் 145 போராளிகள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மிகக்கடுமையான வன்முறை மற்றும் 145 போராளிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான மோதல் இதுவரை இல்லாத அளவிலான ஒரு போர் சூழலை எட்டியுள்ளது.

பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 40 மணிநேரம் தொடர்ச்சியாக இந்த மோதல்கள் நீடித்துள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய பாரிய தேடுதல் மற்றும் பதில் தாக்குதல்களில் சுமார் 145 பலூச் போராளிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக பலூச் விடுதலை இராணுவம் (BLA) போன்ற அமைப்புகள் பாகிஸ்தான் இராணுவ முகாம்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் காவல் நிலையங்களைக் குறிவைத்து பாரிய தாக்குதல்களை நடத்தின. இதற்குப் பதிலடியாகவே இராணுவம் இந்த ‘அதிவேகத் தாக்குதலை’ (Swift Operation) முன்னெடுத்துள்ளது.

இந்த மோதலில் போராளிகள் மட்டுமன்றி, கணிசமான எண்ணிக்கையிலான பாகிஸ்தான் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தான் முழுவதும் தற்போது ஊரடங்கு போன்ற சூழல் நிலவுகிறது. இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சீனா மேற்கொண்டு வரும் பொருளாதாரத் திட்டங்களுக்கு (CPEC) எதிர்ப்புத் தெரிவித்து பலூச் போராளிகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால், இப்பகுதியில் பதற்றம் தணிய வாய்ப்பில்லை என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Recommended For You

About the Author: admin