உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் இருக்கிறதா?
உலக சண்டியன் அமெரிக்கா எப்போது அணு ஆயுதத்தைப் பாவிக்கும்?
எப்போது கடலில் சுற்றித் திரியும் அதன் இரண்டு அல்லது மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடுமோ அப்போது அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது வெறித்தனத்தைக் காட்ட வாய்ப்பிருக்கிறது.
ஏனெனில் அது அந்த நேரத்தில் தனது சமுத்திரங்கள் தாண்டிய ஆதிக்கத்தை இழக்கும். மேலும் அதன் பெட்ரோடாலர் அமைப்பைப் தாங்கி நிற்கும் இராணுவக் குடையையும் இழக்க ஆரம்பிக்கும்.
புரியும் படி சொல்வதானால், விமானம் தாங்கி கப்பல்கள் மூழ்கடிக்கப்படுவதானது
அதன் டாலர் ஆதிக்கத்தை முடிவுக்குக்
கொண்டு வரும். அப்படி ஒரு நிலை வருமானால் அமெரிக்கா வெறித்தனமாக நடக்க ஆரம்பிக்கும். உலக நாடுகளோடு மூர்க்கத்தனமாக செயல்பட வழிவகுக்கும்,
மேலும் முதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சாத்தியப்பாடுகள் அதிகமாகவே இருக்கும்.
அத்தோடு ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது போல அவ்வளவு எளிதாக ஈரானை ஆக்கிரமிக்க முடியது. காரணம் ஈரான் இராணுவ ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், மற்றும் சித்தாந்த ரீதியாகவும்
பலமான கட்டமைப்பில் உள்ள நாடாகும்.
அதனால் அணு ஆயுத போர் என்று வருமானால் முதலில் மத்திய கிழக்கு முழுவதும் கண்மூடித்தனமாக அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம். தற்பாதுகாப்பு எதுவுமே இல்லாத அரபு நாடுகள் சுடுகாடாக மாறும் என்பதில் ஐயமில்லை.
மறு புறத்தில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை பலப்படுத்த ஐரோப்பா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் சாத்தியாப்படுகளும் அதிகரிக்கும். இதனால் உக்ரைன், போலந்து. எஸ்டோனியா, மால்டோவா, நோர்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடன்
போன்ற நாடுகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வருலாம்.
இதேபோல், வட கொரியாவும் சீனாவும் ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா மீது அணு ஆயுத பலத்தை பிரயோகிக்கலாம்.
அதாவது அமெரிக்கவின் (idiot) டிரம்பின்
மூலம் உலக அரசியல் தலைமைத்துவம்
கைமாறி சீனாவிடம் தானாக சென்றடைய வாய்ப்புக்கள் அதிகம் என அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
அப்படி ஒரு மாற்றம் நடந்ததால் நமக்கும் நல்லதுதான். ஒரே வகை அநியாயத்தைக் கண்டு கண்டு சலிப்புத் தட்டிவிட்டது.

