சாவகச்சேரி பிரதேசசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்..!

சாவகச்சேரி பிரதேசசபை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்..!

சாவகச்சேரிப் பிரதேசசபையானது பிரதேச மக்களுடைய மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் செயற்பட வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

 

சாவகச்சேரிப் பிரதேசசபையின் 2025ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் பெருமளவான வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.

இவ்வாறு வேலைத்திட்டங்களை இழுத்தடித்து அபிவிருத்திக்கான நிதியை திரண்ட நிதிக்கு கொண்டு செல்வது தான் நோக்கமா?

 

இதுவரை மக்களுடைய எதிர்பார்ப்புக்களை சாவகச்சேரிப் பிரதேசசபை பூர்த்தி செய்யவில்லை.அதனை நிறைவேற்றும் விதத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.அத்துடன் சபையில் உறுப்பினர்கள் முன்வைக்கின்ற பிரேரணைகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் கடந்த நான்கு மாத காலத்திற்குள் 16 பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளேன் அதற்கான நடவடிக்கைகள் என்ன? எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Recommended For You

About the Author: admin