ஐ.நா.வில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் – இந்தியா உட்பட 135 நாடுகள் ஆதரவு

ஐ.நா.வில் ஈரானுக்கு எதிராக தீர்மானம் – இந்தியா உட்பட 135 நாடுகள் ஆதரவு

2026 மார்ச் 11 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஈரானை கண்டிக்கும் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை பஹ்ரைன் முன்வைத்ததுடன், இந்தியா உட்பட மொத்தம் 135 நாடுகள் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

 

தீர்மானத்தில்,

▪️ ஈரான் உடனடியாக தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும்

▪️ அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை தவிர்க்க வேண்டும்

▪️ உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது

 

என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதேவேளை ரஷ்யா மற்றும் சீனா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி நின்றன.

 

இந்த தீர்மானத்தை “அரசியல் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட ஒன்று” எனக் கூறி ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

Recommended For You

About the Author: admin