கைதடியில் முழுமையாக மூடப்படாத வடிகால்களால் விபத்துக்கள்..!
பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன்
சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் சில இடங்களில் வடிகால்கள் முழுமையாக மூடப்படாமையால் விபத்துக்கள் நேர்வதாக பிரதேசசபை உறுப்பினர் செ.ஜெயபாலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிரதேசசபையில் சமர்ப்பித்துள்ள பிரேரணையில்;
கைதடி இலங்கை வங்கி முன்பாக,கைதடி ஆயுர்வேத வைத்தியசாலை அருகில்,தென்மராட்சி மேற்கு பல்நோக்கு கூட்டுறவுச்சங்கம் முன்பாக,கைதடி தவறணை வீதிக்கு செல்லும் பகுதி மற்றும் கைதடி மேற்கு பேருந்து நிழற்குடை முன்பாக என முக்கியமான இடங்களில் வடிகால்கள் முழுமையாக மூடப்படாமல் இருப்பதனால் பொதுமக்கள் விபத்துக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்துடன் கைதடியில் உள்ள வடிகால்களில் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதாகவும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
எனவே பிரதேசசபை இவ் விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

