மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின ஸ்ரீலங்கா நிகழ்வு..!
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான “சிஹின ஸ்ரீலங்கா” நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (16.09.2025) இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தனின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வளவாளராக பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் கொன்சலின் மாவலன் மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் உளவளத்துணை மாணவி அரூசியா ஆகியோர்கள் பங்கேற்றதுடன் இதில் சமூக சேவைகள் உத்தியோகத்தர்,மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் (மத்திய அரசாங்கம்) நிதிப்பங்களிப்பில் இது இடம்பெற்றது. மாற்றுத் திறனாளிகள் தங்களது தொழில் திறனை வளர்த்துக் கொள்வதில் ஏற்படும் சவால்கள் மற்றும் அதனை தீர்க்க உபாய முறைகள் உட்பட பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் தொடர்ந்தும் தங்கியிருக்காமல் இயலுமையை எடுத்துக் காட்டவும் பொருளாதார பங்களிப்பின் போதான சவால்களை முறியடிப்பது போன்றனவும் கலந்துரையாடப்பட்டன.
இதில் பல்வேறு விசேட திறமைகளை கொண்ட சுமார் 30 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.


