யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை..!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை..!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது (16.09.2025) சங்கானை பிரதேச செயலகத்தில்இன்றைய தினம் மு.ப 8.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரனான கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா , வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ சண்முகநாதன் ஜெயந்தன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது.

 

இந்நடமாடும் சேவையில்

ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள்(தேசிய அடையாள அட்டை),ஓய்வூதியம் தொடர்பான சேவைகள்,

பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,

மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான

சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் ,மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ),சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்,காணி தொடர்பான சேவைகள் ,மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை (Cataract) இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், சங்கானை பிரதேச செயலாளர் திருமதி. கவிதா உதயகுமார் ,உதவி மாவட்ட செயலாளர் , மாவட்ட செயலக பிரதம கணக்காளர்,பதவிநிலை உத்தியோகத்தர்கள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: admin