தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு..!

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு..!

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வழங்கிவைத்தார்.

சைல்ட் அக்சன் லங்கா (Chaild Action Lanka) முகாமையாளர் அஃரா வக்கில் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தில் (15) திகதி இடம் பெற்ற நிகழ்விலேயே குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவில் உள்ள இளைஞர்களுக்கு சைல்ட் அக்சன் லங்கா (Child Action Lanka) நிறுவனத்தினால் பாடசாலை கற்றலை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான நான்கு மாத இலவச கற்கை நெறி நடாத்தப்பட்டுவந்த நிலையில், அதனை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இந் நிகழ்வில் பிரதி கல்வி பணிப்பாளர் ரீ.யசோதரன், சைல்ட் அக்சன் லங்கா நிறுவன அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: admin