கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..!

வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் வீதி ஓரமாக நாட்டப்பட்டிருக்கும் நிழல்தரு புங்கை மரக்கன்றுகளை முழுமையாக பாதுகாத்து கொடுக்கும் நோக்கில் மரக் கூடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் குறித்த வீதி ஓரங்களை பசுமையாக்கும் நோக்கில் குறித்த மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டு, நெற் மற்றும் மரத்தடிகளை

உள்ளடக்கி தற்காலிகமான சிறிய கூடுகள் அமைக்கப்பட்டன.

அவற்றை கால்நடைகள் ஒரு பக்கம் சேதப்படுத்துவதும் மழை பெய்யும் பொழுது கூடுகள் சேதமடைவதுமான நிலைமைகள் தொடர்ந்தன.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் கோரிக்கைக்கமைய மரத்திலான நிரந்தரமான 25 மரக் கூடுகள் வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பினர் வழங்குவதற்கு முன்வந்தனர்.

இதற்கமையை நேற்றைய தினம்(10.09.2025) முதற்கட்டமாக 10 மரக்கூடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட செயலக வீதிச் சூழலை பசுமைப்படுத்தி அழகுபடுத்தும் பணிகளுக்கு உதவி வழங்கிவரும் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பினருக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Recommended For You

About the Author: admin