கொமர்சல் வங்கியால் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்..!
2024 ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கொமர்சல் வங்கியின் வடபிராந்திய கிளையினரால் நேற்றைய தினம் (10) கௌரவிக்கப்பட்டனர்
2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியெய்திய
யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்கள் கொமர்சல் வங்கியில் அருணலு அல்லது இசுறு சேமிப்பு கணக்கை பேணுகின்ற பாடசாலை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதல்கள் இன்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை ரீதியில் முறையே முதல் நிலை மாணவருக்கு ரூ.10,000/-, இரண்டாம் நிலை மாணவருக்கு ரூ.7500/- மூன்றாம் நிலையை பெற்ற மாணவருக்கு ரூ.5000/- பணப்பரிசில்களும் சான்றிதலும் வழங்கி யாழ் மாவட்டத்தை சேர்ந்த 105 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்
கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் அருளம்பலம் ஜெயபாலன் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண பிரதிக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி.கடம்பேஸ்வரன் மணிமார்பன் வட மாகாண ஆரம்பக்கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் அன்னலிங்கம் இரவீந்திரன்
மற்றும் யாழ் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்
பாலசுப்பிரமணியம் வாசுதேவன் மற்றும் யாழ் மாவட்ட கொமர்ஷல் வங்கி கிளைகளின் முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சாதனை புரிந்த மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்


