திருமுறிகண்டியில் “அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்” மற்றும் “Made in Mullaitivu” விற்பனை நிலையம் இன்றைய தினம் திறந்துவைப்பு..!
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினது ஒத்துழைப்புடன் கனேடிய தமிழர் பேரவையின் நிதி (Canadian Tamil Congress )அனுசரணையில், வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் (North East Economic Development Center) ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதப் பிரதேசமான திருமுறிகண்டியில் “அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்” மற்றும் “Made in Mullaitivu” – முல்லைத்தீவு தயாரிப்புகளின் விற்பனை நிலையம் ஆகிய இரு நிலையங்களும் இன்று காலை 10 மணிக்கு (14.03.2026) வடக்கு மாகாண ஆளுனர் கௌரவ நா.வேதநாயகன் மற்றும் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறுவதோடு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், இந்து மாமன்ற வன்னி அலுவலகத்தில் அமைந்துள்ள இந்த உணவகக் கட்டிடத்தில் தமிழர் பாரம்பரிய உயர்தர சைவ உணவுகளை வழங்கும் அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகமும் “Made in Mullaitivu” என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தையும் வடக்கு மாகாணத்தையும் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை ஊக்குவித்து சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உள்ளூர் தயாரிப்புகளின் விற்பனை நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் , வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதார மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திரு. பிரதீப ன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுனர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகவும்
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் திரு. சாய் முரளி
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவி திருமதி அபிராமி கைலாசபிள்ளை, கனேடிய தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குனர் திரு. டன்டன் துரைராஜா, கனேடிய தமிழர் பேரவையின் மனிதாபிமான திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு துஷ்யந்தன் ராஜலக்ஷ்மி துரைரட்ணம் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திரு.நிசாந்தன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு. விஜயகுமார் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதித்தலைவர் தனபாலா உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், செயலாளர் திரு. கந்தசாமி, பொருளாளர் திர குசேலகுமார். கனேடிய தமிழர் பேரவையின் நிர்வாகிகள் உட்பட பலர் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். அத்துடன் மாவட்ட தொழில் முனைவோர் மற்றும் சமூக பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட மை குறிப்பிடத்தக்கது.


