ஓசோனினில் ஏற்பட்டுள்ள ஓட்டை குறித்து விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்

ஓசோனினில் ஏற்பட்டுள்ள ஓட்டை அடுத்த 50 ஆண்டுகளில் மூடப்படும் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.

வானிலை மாற்றம், மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களால் ஒவ்வொரு ஆண்டும் பூமியின் தெற்கு பகுதியில் உள்ள ஓசோனில் துளை உருவாகியது.

கடந்த 1980 ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் செறிவு 50 சதவீதம் குறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் 2070 ஆம் ஆண்டில் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டை மூடப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor