அதிர்ச்சியை ஏற்ப்படுத்தும் பாபாவங்காவின் மற்றுமோர் கணிப்பு!

உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்கள் கணித்திருந்தாலும் , பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் பாபா வாங்காவின் கணிப்பு தான் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

உலகத்தில் எந்த ஆண்டுகளில் எந்த நாடுகளில் எந்தவிதமான பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்று ஏகப்பட்ட கணிப்புகளை பாபா வாங்கா கூறியுள்ளார்.

இந்தியா குறித்த பாபா வாங்காவின் கணிப்பு
இந்த நிலையில் பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. பூமியின் வெப்ப நிலை காரணமாக இந்த வெட்டுக்கிளி தாக்குதல் நடக்கும் என்றும் இது இந்தியாவில் பயிர்களை தாக்கி அழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் நாட்டில் பஞ்சம் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உள்ளதாக பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சமீப ஆண்டுகளில் இதுபோன்ற வெட்டுக்கிளி தாக்குதல் நடந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட இப்போது பாபா வங்கா எச்சரித்து உள்ளதால் அது பேசுபொருள் ஆகியுள்ளது. ஏற்கனவே பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்பில் சில நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதே போல் இத்தாலியும் மிக மோசமான வறட்சியை சந்தித்தது. அதே போல் 2022 ஆம் ஆண்டில் ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்து கூறியிருந்தார்.

இவர் கூறியது போன்றே, ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கனமழை மற்றும் வெள்ளம் பேரழிவையும் ஏற்படுத்தியிருந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

2023இல் என்ன நடக்கும்?
இந்த நிலையில் அடுத்து வரும் ஆண்டுகள் அதாவது 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்றும் 2028இல் வீனஸுக்கு விண்வெளி வீரர்கள் பயணம் செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல 2046இல் உறுப்பு மாற்றுத் தொழில்நுட்பம் காரணமாக மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும் அவர் கணித்தார்.

அதேபோல 2100இல் முதல்,செயற்கை சூரிய ஒளி காரணமாகப் பூமியில் இரவு என்பதே இருக்காது என்றும் பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor