தேசிய வனவிலங்கு பூங்காக்களில் சட்டவிரோத வேட்டையாடுதல் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வன ஜீவராசிகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோழி இறைச்சி உட்பட இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுக்கும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை என்பன இதற்கு காரணமாகும் என அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஐ.டபிள்யு. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
மேலதிக கொடுப்பனவுக்காக விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 23ஆம் திகதி இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைக் காலமாக, காட்டு யானைகளின் தாக்குதல்களால் சிலர் மரணித்துள்ள நிலையில் களப் பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.