இலங்கை சுங்கத் திணைக்களம் BIAவில் வரலாறு காணாத தங்கம் கடத்தல் முயற்சியை முறியடித்தது!

இலங்கை சுங்கத் திணைக்களம் BIAவில் வரலாறு காணாத தங்கம் கடத்தல் முயற்சியை முறியடித்தது!

விமானப் பயணி ஒருவர் மூலம் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த அதிகளவிலான தங்கக் கையிருப்பை இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று கைப்பற்றியுள்ளதாக சுங்கப் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருகொட தெரிவித்துள்ளார். இது இதுவரை விமானப் பயணியொருவரால் கடத்தப்பட முயன்ற மிகப்பெரிய தங்கக் கையிருப்பு என அவர் உறுதிப்படுத்தினார்.

சந்தேகநபர், கொழும்பின் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் ஆவார். இவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயில் இருந்து EK-650 எமிரேட்ஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்துள்ளார்.

சுங்க அதிகாரிகள், 35 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்தைக் கண்டுபிடித்தனர். இதன் பெறுமதி சுமார் ரூபா 1.10 பில்லியன் ஆகும். கார் உதிரி பாகங்கள் போல சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒன்பது கருவிகளுக்குள்ளும், சந்தேகநபரின் பயணப் பொதிக்குள்ளும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

கைப்பற்றப்பட்ட பொருட்களில் 195 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோகிராம் தங்க நகைகள் அடங்கும் என அருகொட தெரிவித்தார்.

இந்த கடத்தல் முயற்சியின் பாரிய மற்றும் நுட்பமான தன்மையைக் கருதி, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் உட்பட பல சிரேஷ்ட சுங்க அதிகாரிகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று நடவடிக்கைகளையும் தொடர்ச்சியான விசாரணைகளையும் பார்வையிட்டனர்.

Recommended For You

About the Author: admin