ராஜபக்ச குடும்பத்திற்கு காவல்துறை அழைப்பாணை:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக காவல்துறையினா் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
முக்கியமான குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இந்த அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நாமல் ராஜபக்ச , நாடுகடத்தப்பட்ட நிலையில் தற்போது தடுப்புக்காவலில் உள்ள பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் (Kehelpannala Padme) தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து வாக்குமூலம் அளிக்க இன்று (குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நாளைய தினம் காவல்துறை நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது நிதி மோசடி தொடர்பான விசாரணை எனக் கருதப்படுகிறது.
ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் அடுத்தடுத்து விசாரணைக்கு அழைக்கப்படுவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமல் ராஜபக்ச மற்றும் ‘கெஹெல்பத்தர பத்மே’ விவகாரம்:
கெஹெல்பத்தர பத்மே இலங்கையின் தேடப்பட்டு வந்த மிக முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவர். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், அண்மையில் சர்வதேச காவல்துறையினரின் (Interpol) உதவியுடன் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்டார்.
பத்மேயால் மேற்கொள்ளப்பட்ட சில பாரிய குற்றச் செயல்கள், ஆட்கடத்தல்கள் அல்லது போதைப்பொருள் கடத்தல்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டதா? அல்லது அவருக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையே ஏதேனும் நேரடி கொடுக்கல் வாங்கல்கள் இருந்ததா? என்பது குறித்தே CID விசாரணை நடத்துகிறது.
பத்மேயிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி தரவுகள் அல்லது வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்சவுக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ‘சிரந்தி ராஜபக்ச’ அறக்கட்டளை அல்லது அவரது பெயரில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு வந்த பாரிய அளவிலான நிதி குறித்தே ஷிரந்தி ராஜபக்சவிடம் FCID விசாரணை நடத்தவுள்ளது.
அரச நிதியைப் பயன்படுத்தியமை அல்லது வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததா? என்பது குறித்து அவர் நாளை வாக்குமூலம் அளிக்க வேண்டியிருக்கும்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு, கடந்த கால அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் ‘சட்டத்தை நிலைநாட்டும்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

